Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு

பீகார்: பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக தொகுதிகளுக்கு 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சாராய்ரஞ்சன் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் ஒப்புகைச் சீட்டுகள் சாலையில் கிடந்தன. சாலையோரம் வாக்காளர் ஒப்புகைச்சீட்டுகள் கொட்டப்பட்டது குறித்து சமஸ்திபூர் தேர்தல் அதிகாரி விசாரணை. ஒப்புகைச்சீட்டுகளை அலட்சியத்துடன் கையாண்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு அளித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில் இது முதல் கட்டமாகும், மொத்தம் 3.75 கோடி வாக்காளர்கள் ஆண்கள் 1.98 கோடி, பெண்கள் 1.76 கோடி வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில், 40,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் பாதுகாப்பு காரணமாக வாக்குப்பதிவு நேரம் மாலை 5 மணிக்கு குறைக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக குறிப்பிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட வாக்குப்பதிவு சதவீதம் தற்போது வெளியிட்டது. 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் மாநிலத்தின் சராசரி வாக்குப்பதிவு 57.29 சதவீதமாகவும், கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 56.28 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமஸ்திபூர், நவம்பர் 8: பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் ஏராளமான VVPAT சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சனிக்கிழமை உதவி தேர்தல் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது

சரைரஞ்சன் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் VVPAT சீட்டுகள் சிதறிக் கிடந்தன. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. எப்போது, ​​எப்படி, ஏன் இந்த சீட்டுகள் வீசப்பட்டன? தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்குமா? இவர்கள் அனைவரும் ஜனநாயகத்தை அழிக்க பீகாருக்கு வந்த பீகாருக்கு வெளியில் இருந்து வந்தவர்களா? தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட நீதிபதி சம்பவ இடத்திற்குச் சென்று இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.