Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்: பொதுநல மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பொதுமனு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. பீகார் மாநிலம் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் வாக்காளர்களின் குடியுரிமைகளை நிரூபிக்கும் வகையில் அவர்களுது பிறப்பு சான்றிதழ்களையும், பிறப்பிடம் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் பெற்றோர் குடியுரிமையை உறுதிப்படுத்தும் சான்றுகளிலும் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக நடக்கும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் ஆளும் பாஜகவுக்கு ஆதரவான வாக்குகளை மட்டும் பாதுகாக்கும் விதத்தில் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்றம் எம்.பி.க்கள் கேசி வேணுகோபால், மஹுவா மொய்த்ரா, மனோஜ் ஜா, சமூக ஆர்வலர் யோகேந்திரன் யாதவ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நாடியுள்ளனர். மேலும் ஜனநாயக சீர்திருத்தம் சங்கம் பியுசியால் உள்ளிட்ட அமைப்புகளும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால் பலம் லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடுவார்கள் என்றும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்காக சுமார் நான்கு கோடி பேரிடம் பிறப்பு சான்றிதழ் கோரப்படுவதால் கடந்த ஆண்டு வாக்களித்தவர் கூட இம்முறை ஜனநாயக கடமையை ஆற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டத்தின் 326வது பிரிவையும் வாக்காளர் பதிவு முறை விதி 21A-யும் மீறுவதாக உள்ளதால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்று அம்மனுக்களில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கி அமர்வு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அம்மனுக்களில் மீது இந்த விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே சிறப்பு வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது பிறப்பு சான்றிதழ் அல்லது பிறப்பிட சான்றிதழ் இல்லாதவர்களை வாக்காளர் பட்டியல் சேர்க்கலாமா, வேண்டாமா என்று தேர்தல் அதிகாரிகள் முடிவு எடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது எதிர்காட்சிகளிடம் மற்றுமின்றி பீகார் வாக்காளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.