Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

டெல்லி: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், உ.பி, ம.பி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. SIR பணிகள் முடிந்து 2026 பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் பேட்டியளித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது;

முதற்கட்டமாக பீகார் மாநிலத்தில் வெற்றிகரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக முடிந்தது; எந்த மேல்முறையீடும் இல்லை. 2-ம் கட்டமாக 12 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்க உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம். தகுதியான வாக்காளர்கள் விடுபடக் கூடாது என்பதே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம்.

பீகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று உள்ளது. கடைசி திறப்பு தீவிர திருத்தம் 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002 - 2004 ஆண்டுகளில் நடைபெற்றது. பல இடங்களில் வாக்காளர் பெயர் இடம்பெறுவது, மறைந்த வாக்காளர் பெயர் இடம்பெற்ற காரணங்களுக்காக எஸ்.ஐ.ஆர். இறுதி வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முதல் முறையிட்டை செய்யலாம். ஆட்சியர் நிராகரித்தால் முடிவுக்கு எதிராக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் 2-வது முறையீட்டை மேற்கொள்ளலாம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திவீர திருத்தத்தின் கீழ் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பதிவு அதிகாரி நியமிக்கப்படுவார். ஒவ்வொரு தாலுகாவுக்கும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரி நியமிக்கப்படுவார்கள். 2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் எந்த ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. வாக்காளர் பட்டியலில் பிரச்சனை ஏதேனும் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம். தற்போதைய தேதியில் உள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.