பீகார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1303 வேட்பாளர்களில் 423 பேர் மீது கிரிமினல் வழக்குகள்..!!
பீகார் : பீகார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1303 வேட்பாளர்களில் 423 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 1,314 பேர் களம் காணுவது இறுதியாகியுள்ளது.
423 பேரில் 354 பேர் மீது கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான தீவிர குற்ற வழக்குகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு இத்தகவல்களை தெரிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 519 பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவல் வெளியாகியது. 1303 வேட்பாளர்களில் 651 பேர் பட்டதாரிகள்; 105 பேர் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
