பாட்னா: பீகார் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்று கொண்டார். முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ஆஃப்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார். பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உத்தரபிரதேசம், ஆந்திரா, டெல்லி முதல்வர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். ஐக்கிய ஜனதா தள சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வானதை அடுத்து இன்று முதல்வராக பதவியேற்றார்.
+
Advertisement


