டெல்லி: தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சிகள் வாக்களிப்பதை வாக்காளர்களுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக்குகின்றன. பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டம் ஒரு விழாக்கோல மனநிலையில் இன்று அமைதியாக நிறைவடைந்தது, பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர், நேரடி இணைய ஒளிபரப்பு மூலம் வாக்குப்பதிவை உன்னிப்பாகக் கண்காணித்தனர். பீகாரில் முதல் முறையாக 100% வாக்குச்சாவடிகளிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து தலைமை அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேரில் தொடர்பு கொண்டார்.
மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 3.75 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுடன் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பீஹாரில் முதல்முறையாக, சர்வதேசத் தேர்தல் பார்வையாளர் திட்டத்தின் (IEVP) ஒரு பகுதியாக தென் ஆப்ரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பெல்ஜியம் மற்றும் கொலம்பியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள் தேர்தல் நடவடிக்கைகளை பார்வையிட்டனர். அவர்கள் பீஹார் தேர்தல்கள் சர்வதேச அளவில் நடைபெற்ற நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, வெளிப்படையான, திறமையான மற்றும் பங்கேற்பு தேர்தல்கள் என்று பிரதிநிதிகள் பாராட்டினர்.
4 இலட்சத்திற்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள் நேற்று இரவு 11.20 மணிக்கே அந்தந்த வாக்குச்சாவடிகளை சென்றடைந்தனர். 1,314 வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட 67,902 வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) இன்று காலை 7.00 மணிக்க முன்னதாகவே முடிக்கப்பட்டு அனைத்துச் 45341 சாவடிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது.
பீஹாரின் புர்தா நடைமுறையைப் பின்பற்றும் பெண்கள் அடையாளம் காண அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) பணியாளருடன் இணைந்து 90,000-க்கும் மேற்பட்ட ஜீவிகா திடிகள்/பெண் தன்னார்வலர்கள் நிறுத்தப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி வாக்குச்சாவடியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வாக்குப்பதிவு புள்ளி விவரங்களை தலைமை அதிகாரிகள் (Presiding Officer) புதுப்பித்தனர். இதன் விளைவாக தோராயமான வாக்குப்பதிவு போக்குகளை புதுப்பிப்பதில் குறைந்தபட்ச தாமதம் ஏற்பட்டது.
பல புதிய வாக்காளர் நட்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் காணப்பட்டதற்கு வாக்காளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஏனைய புதிய முயற்சிகளான வாக்குச்சாவடிகளில் மொபைல் ஒப்படைப்பு வசதி, எளிதில் வாசிக்கக்கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டுகள் (VIS) மற்றும் கூட்ட நெரிசலைக் குறைக்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் போன்றவை அடங்கும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உடல் ஊனமுற்ற (PwD) வாக்காளர்களுக்கு உதவ சக்கர நாற்காலிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைத்து நியமிக்கப்பட்டனர். கூடுதலாக, வாக்குச்சாவடிக்கு அவர்களை அழைத்துச் செல்ல மின்சார ரிக்ஷா வசதியும் வழங்கப்பட்டது. மாவட்ட வாரியாகவும், சட்டமன்ற தொகுதி வாரியாகவும் வாக்குப்பதிவு எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தின் இணையதள (ECINet) செயலியில் கிடைக்கின்றன.

