Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த முதல்கட்ட தேர்தலில் சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. 5 வாக்குச்சாவடி மையங்களில் மாலை 5 மணிவரை மட்டுமே வாக்கு செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து பகுதிகளிலும், காலை விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது. குறிப்பாக முதல் 2 மணி நேரத்தில் அதிகபட்ச வாக்குபதிவு நடைபெற்றது. மாலை நேரங்களில் வாக்குப்பதிவு குறைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.13 % வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

குளிர்காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் விரைவாக சூரிய அஸ்தமனம் ஆகும் என்பதால் பல இடங்களில் மக்கள் அதிக அளவில் மாலை நேரங்களில் வரிசையில் நின்று வாக்களிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து EVM மற்றும் vvpat இயந்திரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லும் பணி தொடங்கப்படவுள்ளது.