Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருஞ்சக்கரம் / பயணிகள் விசைச் சக்கரம் இயக்கத்திற்கான தரநிலைக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியீடு!

சென்னை: பெருஞ்சக்கரம் / பயணிகள் விசைச் சக்கரம் (Giant/Ferris wheels) என்பது மக்களுக்கு மகிழ்வூட்டும் மிகப்பெரிய கட்டமைப்புகளாகும். இவை கேளிக்கைப் பூங்காக்கள் (Theme Park) போன்ற நிலையான அமைப்புகளில் மட்டுமின்றி, கோவில் திருவிழாக்கள் மற்றும் பொருட்காட்சி போன்ற தற்காலிக அமைப்புகளிலும் இயக்கப்படுகின்றன.

சமீபத்தில் பெருஞ்சக்கரம் உள்ளிட்ட கேளிக்கை இயந்திரங்களில் சில விபத்துத் தகவல்கள் பதிவாகியுள்ளன. எனவே, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஒருங்கிணைந்த பாதுகாப்பு வழிகாட்டுதல் தேவையாக உள்ளதை கருத்தில் கொண்டு விபத்துக்களை தடுப்பதற்காக நிலையான அமைப்பு மற்றும் தற்காலிக அமைப்புகளின் பெருஞ்சக்கரம் / கேளிக்கைப் பூங்கா நிர்வாகிகள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள். BIS அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் கூட்டம் 13.06.2025 அன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு பெருஞ்சக்கரம் / பயணிகள் விசைச் சக்கரம் (Giant/Ferris wheels) இயக்கத்திற்கான தரநிலைக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறை (Standard Operating Procedure) உருவாக்கப்பட்டு. அரசாணை(நிலை) எண் 409, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள் 29.09.2025-இல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தரநிலைக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறை முறையாக கடைபிடிப்பதால் பெருஞ்சக்கரம் / பயணிகள் விசைச் சக்கரத்தில் விபத்துக்கள் தடுக்கப்படும். அரசானை வெளியிடப்பட்ட ஆறு மாதத்திற்குள் தற்போது இயங்கிவரும் கேளிக்கைப் பூங்காக்கள் நிலையான அமைப்புகளில் பெருஞ்சக்கரம் / பயணிகள் விசைச் சக்கரம் இயக்குவதற்கு இந்திய தர நிர்ணய கழகத்தின் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பெருஞ்சக்கரம் / பயணிகள் விசைச் சக்கரத்தினை இயக்குவதற்கு வழிகாட்டி நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்காட்சி மற்றும் கோவில் திருவிழாக்கள் போன்ற தற்காலிக அமைப்புகளில் பெருஞ்சக்கரம் / பயணிகள் விசைச் சக்கரத்தினை இயக்குவதற்கு பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்படும் அனுமதிக்கான நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இணையவழி ஒருங்கிணைப்பு (Online integration) முறையினை தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையுடன் இணைந்து செயல்படுத்துமாறு சுற்றுலா துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.