திருவனந்தபுரம்: பூடானில் இருந்து சட்ட விரோதமாக கார்கள் இந்தியாவில் விற்கப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு தொடர்பு உள்ளதாக கேரள சுங்கத்துறை இயக்குனர் டி.ஜி.தாமஸ் தெரிவித்துள்ளார். முறையான வரி செலுத்தாமல் வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 200 கார்கள் வரை முறையான சுங்கக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்தாமல் கொண்டுவரப்பட்டு கேரளாவில் விற்கப்பட்டுள்ளன. வாகனங்களை கண்டறிவதற்கான சோதனையை கேரளா மாநிலத்தில் செயல்படும் சுங்கத்துறையினர் தொடங்கி உள்ளனர். சொகுசு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சட்டவிரோதமாக பூடான் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement