புதுடெல்லி: அசாமை சேர்ந்த பிரபல பாடகர், பாடலாசிரியர் பூபேன் ஹசாரிகா. கடந்த 1926ம் ஆண்டு செப்டம்பர் 8 ம்தேதி பிறந்தார். அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று துவங்குகிறது. இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,‘‘ இந்திய கலாச்சாரம் மற்றும் இசையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பர் 8ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அசாதாரண திறன் வாய்ந்த இசைக்கலைஞர்களில் ஒருவரான பாரத ரத்னா பூபேன் ஹசாரிகா பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் தொடக்க ஆண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது’’ என்றார்.
+
Advertisement