பீமா கோரேகான் வழக்கு: சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி பேராசிரியர் ஹனி பாபுவுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட்
மும்பை: பீமா கோரேகான் வழக்கில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி பேராசிரியர் ஹனி பாபுவுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. பீமா கோரேகான் வழக்கில் 2018ஆம் ஆண்டு டெல்லி பல்கலை. பேராசிரியர் ஹனி பாபு கைது செய்யப்பட்டார். ஹனி பாபு ஏற்கனவே 5.7 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதாக கூறி மும்பை ஐகோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது.

