ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,500 கனஅடியில் இருந்து 11,667 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 28.49 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.70 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட உள்ளது.
+
Advertisement