சென்னை: மிக சிறந்த நீர் பாரம்பரிய நீர்ப்பாசனத்தின் கட்டமைப்புக்கும் மற்றும் பராமரிப்புக்கான பெருமைக்குரிய விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது. சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் நடத்திய நான்காவது உலக நீர்ப்பாசன மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரியமிக்க நீர்ப்பாசன கட்டமைப்புகளான 1852ல் கட்டப்பட்டு 200 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள செய்யார் அணைக்கட்டு, 300 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள கொடிவேரி அணைக்கட்டு மற்றும் சோழர் காலத்தில் கட்டப்பட்டு 700 ஆண்டுகளாக பயன்பாட்டிலும் சிறந்த பராமரிப்பிலும் உள்ள நொய்யல் நீர் பாசன கட்டமைப்புக்கும் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் தலைவர் மார்கோ ஆர்சியேரி மற்றும் பொதுச்செயலாளர் ஆர்.கே.குப்தாவிடம் இருந்து, சி.பொதுப்பணி திலகம் (தலைமை பொறியாளர், சென்னை மண்டலம்) மற்றும் தீ.தமிழ்ச்செல்வி (தலைமை பொறியாளர், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
+
Advertisement