பெங்களூரு: உலக டென்னிஸ் லீக் போட்டிகள், பெங்களூருவில் வரும் டிசம்பர் 17ம் துவங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளன. கடந்த 2022ல் முதன் முதலாக ஆடப்பட்ட உலக டென்னிஸ் லீக் போட்டிகள், முதன் முறையாக, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வெளியே தற்போது நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகளில், ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் யுஎஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் டேனியில் மெத்வதேவ், கடந்த 2022ல் நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற உள்ளனர்.


