பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கையில் லக்கேஜ் கொண்டு சென்றால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். நாட்டில் பெரிய மாநகரங்களில் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இருப்பினும் அவசர தேவைக்காக கட்டணத்தை கருத்தில் கொள்ளாமல் தினமும் லட்சக்கணக்கானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
இந்நிலையில் மெட்ரோ ரயலில் பயணம் செய்யும் பயணிகள் லக்கேஜ் கொண்டு சென்றால், அதற்கு கட்டணம் விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியது. இது உண்மை என்பதை எடுத்து காட்டும் வகையில், பயணி ஒருவர் தன்னிடம் இருந்த பேக் ஒன்றுக்கு ரூ.30 கட்டணம் வசூலித்ததாக, அதை அவரது சமூகவலைத்தள பகுதியில் பதிவிட்டு, கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.