புதுடெல்லி: பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், விளிம்பு நிலையில் வாழும் நபர்களின் வாழ்வாதாரம் மற்றும் மறுவாழ்வு (ஸ்மைல்) திட்டம் ஒன்றிய சமூக நலத்துறை சார்பில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3 ஆண்டுகளில் 8,000 பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் இலக்குடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது சில திருத்தங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் புனித யாத்திரைகள், மத தலங்கள், வரலாற்று அடையாளங்கள், சுற்றுலா பகுதிகளை மையமாக கொண்ட நகரங்களில் மாநில நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதில் புனித யாத்திரை மற்றும் மத தலங்களில் இத்திட்டத்தை செயல்படுவதில் மத அறக்கட்டளைகள், புனித தல வாரியங்கள் பங்கு வகிக்கும் வகையில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement