சென்னை: உடல்நலக்குறைவால் காலமான ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசில் எரிசக்தி செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இருந்த பீலா வெங்கடேசன் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் மறைந்த பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
பீலா வெங்கடேசன் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர். அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசனின் உடலுக்கு அரசு உயர் அதிகாரிகள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, ககந்தீப் சிங் பேடி உள்ளிட்டவர்களும் பீலா வெங்கடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.