நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் மற்றும் அது சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் எணிக்கையானது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை உடைத்து உணவு பொருட்களை உண்டு செல்கின்றது.
இந்த நிலையில் குன்னுரில் உள்ள மளிகை கடை ஒன்றை உடைத்து கரடி உணவு பொருட்களை உண்டு சென்றுள்ளது. இந்த காட்சிகள் ஆனது அங்கு இருந்த cctv கேமராவில் பதிவாகி உள்ளது.
இதன் அடிப்படையில் வன துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளானர்.