மகிந்திரா நிறுவனம், பிஇ6 பார்முலா இ எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 79 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 682 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என அராய் சான்றளித்துள்ளது. இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 286 எச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த நிறுவனத்தின் ஸ்டாண்டர்டு எலெக்ட்ரிக் வேரியண்ட் போலவே உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 ஸ்போக் ஸ்டீரில் வீல், ஹாலோ லூப், இர்டையான 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், 2 வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள், குரூஸ் கன்ட்ரோல் உட்பட பல அம்சங்கள் உள்ளன. இதில் எப்இ2 எப்இ3 என 2 வேரியண்டகள் உள்ளன. எப்இ2 ஷோரூம் விலை சுமார் ரூ.23.69 லட்சம். எப்இ3 வேரியண்ட் சுமார் ரூ.24.49 லட்சம். அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். பிப்ரவரி 14ம் தேதி முதல் வாகன டெலிவரி தொடங்கும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


