மும்பை: டெல்லி கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹாஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவராக இருந்த ரோஜர் பின்னி, 70 வயது ஆனதால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில், பிசிசிஐயின் ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் டெல்லி கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ புதிய தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐயின் 37வது தலைவராக தேர்வாகி உள்ள மன்ஹாஸ், 157 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். அப்போட்டிகளில், 27 சதங்கள் உட்பட 9714 ரன்களை அவர் எடுத்துள்ளார்.