டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான 2வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
