டெல்லி: அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அக்.16- 22 காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று விடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்.22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, அதற்கடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பெறுகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் 44 செ.மீ. மழை பதிவாகும்.