டெல்லி: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு ஆந்திரா, தெலுங்கானா வாயிலாக மராட்டியம் செல்கிறது. இந்த பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி கனமழைக்கு சற்று வாய்ப்பு இருக்கிறது. மழைக்கான வாய்ப்பு இல்லை என்றாலும், வருகிற 18-ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருக்கும். அதன் பிறகு மீண்டும் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என கூறப்படுகிறது.