பணி: லோக்கல் பேங்க் ஆபீசர்.
மொத்த காலியிடங்கள்: 2500. தமிழ்நாட்டிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு காலியிடங்கள்: 60 (பொது- 25, ெபாருளாதார பிற்பட்டோர்-6, ஒபிசி-16, எஸ்சி-9, எஸ்டி-4).
சம்பளம்: ரூ.48,480- 85,920.
வயது: 01.07.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிபுரியும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச, எழுத தெரிந்திருந்திருக்க வேண்டும். சிஏ/காஸ்ட் அக்கவுன்டென்ட்/இன்ஜினியரிங்/மெடிக்கல் துறை சார்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் ஏதாவதொரு வங்கி/நிதி நிறுவனத்தில் குறைந்தது ஒரு வருடம் ஆபீசராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆங்கில அறிவு, வங்கி அறிவு, பொது/பொருளியல் அறிவு/ ரீசனிங் ஏபிலிட்டி மற்றும் குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட் ஆகிய பிரிவுகளில் தலா 30 கேள்விகள் வீதம் மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், தஞ்சை, கடலூர், விருதுநகர், வேலூர் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (24.07.2025).