*நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தம்முரெட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகன். இவர் தனத 3 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
இவரது தோட்டத்தில் மக்காசோளம் நன்கு விளைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டுப் பன்றிகளின் கூட்டம் ஒன்று மக்காச்சோளக்கருதுகளை தின்று சக்கையாக்கியது.
நேற்று காலை தனது தோட்டத்திற்கு சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். நன்கு விளைந்த 500க்கும் மேற்பட்ட மக்காச்சோள பயிர்களின் கருதுகளை பன்றிகள் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



