சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் அளித்த பேட்டி: பார் கவுன்சில்களுக்கான தேர்தல்கள் பல மாநிலங்களில் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2026 ஜனவரி 31ம் தேதிக்குள் மாநில பார் கவுன்சில்களின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் மனு செய்திருந்தார். தமிழக பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடைபெறவில்லை. 5 காலம் தான் பதவிக்காலம் என்ற நிலையில் பதவிக்காலத்தை நீட்டிக்க கூடாது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகி வருகிறார்கள். முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தேர்தல் நடத்த வேண்டும். இதுகுறித்து பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் நீதிமன்றத்தை அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement