திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர், பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மெரிடியன் இண்டர்நேஷனல், 15 வேலம்பாளையம் அடுத்த திலகர் நகர் பகுதியைச் சேர்ந்த ஜேபி கிளாதிங்ஸ் மற்றும் கணக்கம்பாளையத்தில் உள்ள மற்றொரு பனியன் நிறுவனம் என 3 பனியன் நிறுவனங்களில் நேற்று மாலை கோவையில் இருந்து 3 கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி ரெய்டு நடந்து வரும் பனியன் நிறுவனங்கள் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
+
Advertisement