Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடப்பாண்டு ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

டெல்லி: நடப்பாண்டு ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் சென்றுள்ளனர் என்றும் கடந்தாண்டு ஹஜ் சென்ற இந்தியர்களில் 187 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை தங்கள் முக்கிய மதக்கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர்.

அதன்படி, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்கா மதினாவுக்கு இஸ்லாமிய மதத்தினர் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் புனிதப் பயணம் மே 9 முதல் ஜூலை 22 வரை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவின் மெக்காவில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடப்பாண்டில் 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மரணம், வயது மூப்பு மற்றும் விபத்து போன்ற காரணங்களால் 98 இந்தியர்கள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ஹஜ் காலத்தில் 187 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.