திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேர்ந்திரன் தோட்டம் உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் தோட்டப்பணியாளர்களாக பணியாற்றிவருகின்றனர். அதிகாலையில் அவர்கள் குடுபோதையில் ரகளை செய்வதாக காவல்நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. இதனை விசாரிப்பதற்காக எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவல் ஓட்டுநர் ஒருவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்களுடன் சமரசம் பேசி பிரச்சனையை தீர்க்க முயன்றுள்ளனர். இந்த நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த எஸ்.ஐ. சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
காவல்துறை உயர்அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பக்கட்டுள்ளது.