டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு : 11 படுகாயம்

  டெல்லி: டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் நுழைவு வாயில் கேட்-1 அருகே கார் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் உயர் பாதுகாப்பு அடுக்கில் உள்ள செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார்...

ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும்: மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

  சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிறிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை...

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.91,840க்கு விற்பனை

    சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 11,270 ரூபாய்க்கும், பவுன் 90,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன்...

தமிழ்நாடு முழுவதும் 25 “அன்புச் சோலை” மையங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக “அன்புச் சோலை” மையங்கள் ஒரு மாநகராட்சியில் இரண்டு வீதம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், சென்னை பெருநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில்...

“கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திராவிட மாடல் 2.0 அரசிலும் தொடரும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை. குகை கோயில்கள் - கல்வெட்டுகள் - தொல்லியல் சின்னங்கள் என்று நிறைந்து...

அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது : செபி எச்சரிக்கை

மும்பை : அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான SEBI எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ""மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எலெக்ட்ரானிக் தங்க ரசீதுகள் வழங்கும் கான்ட்ராக்ட்டுகள், தங்கம் இ.டி‌.எஃப்கள் ஆகியவை செபியால் அங்கீகரிக்கப்பட்ட தங்கம் முதலீடுகள்.இவற்றில்...

எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை.. தேர்தலில் இபிஎஸ்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ஆர்.எஸ்.பாரதி காட்டம்!!

சென்னை: எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; “எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்றாலும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ‘என்னை ஏன் விமர்சிக்கவில்லை?’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார்...

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று (09.11.2025) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய...

ஜப்பானின் உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500

டோக்கியோ: உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படு​கிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்​ளது. அதிநவீன தொழில் நுட்பம் மற்றும் அரிசி-பஃபிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய ரக அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கின்மேமாய் பிரீமியம் என அழைக்கப்படும் அரிசி தான் உலகில் மிகவும் ஆடம்பரமான விலையுயர்ந்த அரிசியாக பார்க்கப்படுகிறது. அரிசி...

கல்லீரல் பிரச்சனை காரணமாக துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய் காலமானார்!!

சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய், உடல்நலக் குறைவால் இன்று காலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ் தவிர மலையாளம் உள்ளிட்டத் திரையுலகிலும் நடித்துள்ளார். 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அபிநய், விஜய்...