Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு உ.பி. இளைஞரிடம் போலீசார் விசாரணை

சென்னை: திருவள்ளூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உத்தரப்பிரதேச இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி அருகே 8வயது சிறுமி கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது வட மாநில இளைஞர் ஒருவரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டார் . இச்சம்பவம் தொடர்பாக 8க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் கடந்த 12 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படத்தையும் வீடியோ காட்சியையும் போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

குற்றவாளி குறித்த புகைப்படங்கள், புதிய கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் ஆகியவற்றை பதிவிட்டு தகவலை தெரிவிக்க குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் உருவத்தைபோல் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் புகைப்படம், வீடியோவை அண்மையில் போலீஸ் வெளியிட்டது. பாலியல் குற்றவாளி மின்சார ரயிலில் செல்வது போன்ற புகைப்படம் வெளியானது. சிறுமியை பலாத்காரம் செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஏற்கனவே போலீஸ் அறிவித்து இருந்தனர். குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்டதாகக் கூறி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உ.பி. இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.