Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புக்கான இடஒதுக்கீட்டு சுற்றுக்கு ஜூலை 30க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் சார்பில் 2025-2026 - இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டு சுற்றுக்காக சில காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சென்னை 600 113ல் 2025-2026ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளுக்கான வழக்கமான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதில் கீழ்க்காணும் பிரிவுகளில் இடஒதுக்கீட்டு சுற்றுக்காக சில காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

23.07.2025 முதல் www.filminstitute.tn.gov.in எனும் இணையதளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை, பயனாளர் கையேட்டின்(User Manual) அறிவுறுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களையும் 30.07.2025 மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.