Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசு மக்கள் பக்கம் நின்று வலுவான வாதத்தை முன்வைத்ததால் நீதி வென்றது : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நன்றி!!

தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (2.3.2024) முகாம் அலுவலகத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் திரு. சுந்தரராஜன், திரு. பிரபாகரன், திரு. வைத்திசெல்வன், திரு. ஜியோ டாமின். பேராட்டக் குழுவைக் சார்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி, திருமதி பாத்திமா பாபு, திரு. ஹரிராகவன், திரு. மகேஷ்குமார். திரு. மெரினா பிரபு, திரு. சுஜித், திரு. குணசீலன், திரு. ரீகன், திரு. ராஜா, திரு. கிதர் பிஸ்மி. திரு. அம்ஜித், திருமதி வசந்தி. திரு. சிம்லா. திரு. கோபால், திரு. வாஞ்சிநாதன், திருமதி மாரியம்மாள் ஆகியோர் சந்தித்து. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையொட்டியும், இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தூத்துக்குடியில் உருக்காலையை 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம். மொத்தம் 65 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டதோடு, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளது தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.இச்சந்திப்பின்போது. நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.