சென்னை: தமிழ்நாட்டில் 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு(முகையூர், பனையூர்), மரக்காணம், கடலூர்(சிலம்பிமங்கலம்) , மயிலாடுதுறை (வானகிரி), நாகை (விழுந்தமாவடி) பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. தூத்துக்குடி (மணப்பாடு), குமரி கடற்கரை பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டாளர்களுக்கு தொழில் கொள்கை அடிப்படையில் அனுமதிகள் வழங்கப்படும். 30 வருடம் முதல் 99 வருடம் வரை நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படும். சுற்றுலா, கப்பல் கட்டும் தளம், கடல் உணவு உற்பத்தி தொழில் தொடங்க பல வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.