Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சரயு கால்வாயில் வாகனம் விழுந்து ஒரே குடும்பத்தில் 11 பேர் பலி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள சிகாக்கான் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் உட்பட 15 பேர், கர்குபூர் பகுதியில் அமைந்துள்ள பிருத்விநாத் கோயிலில் வழிபாடு செய்வதற்காகப் பயணிகள் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

சீகான் - கர்குபூர் சாலையில் உள்ள பெல்வா பஹுதா என்ற இடத்தின் அருகே சென்றபோது, ஓட்டுநரான பிரகலாத் குப்தாவின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் இருந்த சரயு கால்வாய்க்குள் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 6 பெண்கள், 2 ஆண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். உள்ளூர் கிராம மக்களும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்ட துரித மீட்புப் பணியில், ஓட்டுநர் உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.