Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் 5-ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையில் விழுந்து நொறுங்கியது

கலிபோர்னியா: கலிபோர்னியாவின் லேமோர் கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அமெரிக்காவின் 5-ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்திற்குள்ளான விமானத்தின் காக்பிட்-ல் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசரகால குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய 5-ம் தலைமுறை விமானமாக F-35 விமானம் பார்க்கப்படுகிறது. இதில் F-35 A, F-35 B, F-35 C என 3-வகைகள் உள்ளது. இதில் C வகை போர் விமானம் கடற்படைக்கு பயன்படுத்தக்கூடியது. இந்த விமானம் தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் தற்போதுவரை அறியப்படவில்லை.

உலகின் முதல் 5-ம் தலைமுறை விமானமாக F-35 விமானம் பார்க்கப்பட்டது. தற்போதுவரை உலகின் சக்திவாய்ந்த விமானங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டுள்ளது. ராஃப் ரைடர்ஸ் என்று அழைக்கப்படும் ஸ்ட்ரைக் ஃபைட்டர் ஸ்குவாட்ரான் VF-125க்கு பயிற்சி விமானமாக இந்த F-35 C விமானம் இணைக்கப்பட்டிருந்தது.

இன்று வழக்கம் போல பயிற்சி தொடங்கியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நடந்த இடம் விவசாய நிலம் என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.