Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

புதுடெல்லி: நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், முதல்கட்டமாக 30 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3வது முறையாக தக்கவைத்துக் கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி பதவியேற்று கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பிரதமராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாஜக ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு, நீதி, மருத்துவம் உள்ளிட்ட துறைசார்ந்த பிரபலங்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், 30 கேபினட் அமைச்சர்கள் உட்பட 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதன் விவரம் பின் வருமாறு;

நரேந்திர மோடி - பிரதமர்

அமித்ஷா - மத்திய அமைச்சர்

ராஜ்நாத் சிங் - மத்திய அமைச்சர்

ஜெபி நட்டா - மத்திய அமைச்சர்

நிதின் கட்கரி - மத்திய அமைச்சர்

சிவராஜ் சிங் சௌகான் - மத்திய அமைச்சர்

நிர்மலா சீதாராமன் - மத்திய அமைச்சர்

ஜெய் சங்கர் - மத்திய அமைச்சர்

மனோகர் லால் கட்டார் - மத்திய அமைச்சர்

குமாரசாமி - மத்திய அமைச்சர்

பியூஷ் கோயல் - மத்திய அமைச்சர்

தர்மேந்திர பிரதான் - மத்திய அமைச்சர்

ஜிதன் ராம் மாஞ்சி - மத்திய அமைச்சர்

சர்பானந்த சோனோவால் - மத்திய அமைச்சர்

விரேந்திர குமார் - மத்திய அமைச்சர்

ராம் மோகன் நாயுடு - மத்திய அமைச்சர்

பிரகலாத் ஜோஷி - மத்திய அமைச்சர்

ஜுவல் ஓரம் - மத்திய அமைச்சர்

கிரி ராஜ் சிங் - மத்திய அமைச்சர்

அஸ்வினி வைஷ்ணவ் - மத்திய அமைச்சர்

ஜோதிராதித்ய சிந்தியா - மத்திய அமைச்சர்

பூபேந்திர யாதவ் - மத்திய அமைச்சர்

கஜேந்திர சிங் ஷெகாவத் - மத்திய அமைச்சர்

அன்னபூர்ணா தேவி - மத்திய அமைச்சர்

கிரண் ரிஜிஜு - மத்திய அமைச்சர்

ஹர்தீப் சிங் பூரி - மத்திய அமைச்சர்

சிராக் பாஸ்வான் - மத்திய அமைச்சர்

கிஷண் ரெட்டி - மத்திய அமைச்சர்

அர்ஜுன்ராம் மேக்வால் - மத்திய அமைச்சர்

பிரதாப் ராவ் ஜாதவ் - மத்திய அமைச்சர்

ஜெயந்த் சௌத்ரி - மத்திய அமைச்சர்