Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றைய நிகழ்வுகள்

* ரயில்வேயில் லோகோ பைலட்டுகளுக்கு உரிய ஓய்வு அளிக்கப்படுகிறதா? காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறதா? திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி

இந்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் எனப்படும் இன்ஜின் ஓட்டுனர்களுக்கான ஓய்வு, ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்பும் முறை குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கேள்விகளை எழுப்பியிருந்தார்.இந்திய ரயில்வேயில், ரயில் இன்ஜின்களை இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கு வேலை நேரம் மற்றும் விடுப்புக் கொள்கை உள்ளதா?

அப்படியானால் ஒரு வேலை நாளில் ஒரு லோகோ பைலட்டின் மொத்த வேலை நேரம் எவ்வளவு? அதில் இடைவேளை மற்றும் இயற்கை உபாதைக்கான நேரம் உள்ளிட்ட விவரங்கள் என்ன?

பணியில் இருக்கும் லோகோ பைலட்டுகளுக்கு உணவு உட்கொள்வதற்கும் இயற்கை உபாதைகளுக்கு சென்று வரவும் இடைவேளை வழங்க வேண்டும் என்ற அவர்களின் நீண்டகால கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது என்பது உண்மையா? இதனால்தான் பெரிய ரயில் விபத்துகளில் மனித தவறுகள் காரணமாகக் கூறப்படுகின்றன என்பது உண்மையா?

லோகோ பைலட்டுகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நீண்ட தூர அல்லது அதிவேக ரயில்களில் இரண்டு லோகோ பைலட்டுகள் அல்லது உதவி பைலட்டுகளை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

லோகோ பைலட்டுகளுக்கு வெளியூர் பயணத்தில் இருந்து திரும்பிய பின் கட்டாயமாக 16 மணிநேர ஓய்வும், வாராந்திர 30 மணிநேர ஓய்வும் முறையாக வழங்கப்படவில்லை என்ற குறைகளை அரசாங்கம் அறிந்திருக்கிறதா?

லோகோ பைலட்டுகள் மற்றும் உதவி லோகோ பைலட்டுகளுக்கு போதுமான ஓய்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ரயில்வேயில் தற்போது உள்ள லோகோ பைலட்டுகள் மற்றும் உதவி லோகோ பைலட்டுகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றை நிரப்பாததற்கான காரணங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்கள்.

தேசி நெடுஞ்சாலைகளில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லாதது ஏன்? கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார், தேனி திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் கேள்வி

தேசிய நெடுஞ்சாலைகளில் (ழிபிs) சரியான நேரத்தில் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாதது, சிற்றுண்டிச்சாலை/கேன்டீன், சரியான வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சாலை/கார் பயனர்களுக்கான ஓய்வு அறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார் மற்றும் தங்க தமிழ்செல்வன் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளனர்.

மேற்சொன்ன காரணங்களின் காரணமாக பல பயணிகள் சுங்கவரி செலுத்தியும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

சாலையை முறையாகப் பராமரித்தல் மற்றும் அனைத்து பராமரிப்புப் பணிகளும் முடியும் வரை சுங்கச்சாவடிகள் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல் ஆகிய நிபந்தனைகளை மீறியதற்காக ஒப்பந்த நிறுவனம் மீது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமா?

தேசிய நெடுஞ்சாலைகளில் கார்/சாலைப் பயனர்களின் வசதிக்காக மேற்கண்ட குறைபாடுகளை நீக்குவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமா?

வெள்ள மேலாண்மைக்கு புதிய திட்டங்கள் என்ன? தேனி திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் கேள்வி

நாடு முழுவதும் வெள்ள மேலாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் மொத்த திட்டங்கள் மற்றும் திட்டங்களின் எண்ணிக்கை குறித்து திமுக தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்திட்டங்களின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில், மாநில வாரியாக, ஒவ்வொன்றிலும் ஒதுக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதிகளின் விவரங்கள் என்ன மற்றும் மேற்கூறிய காலகட்டத்தில் இந்தத் திட்டங்கள் மூலம் அடைந்த சாதனை என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

சிறு தொழில்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை வழங்காதது ஏன்? டாக்டர் கலாநிதி வீராசாமி கேள்வி

மைக்ரோ மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நம்பிக்கை நிதி(சிநிஜிவிஷிணி) மற்றும் பல முக்கிய விஷிவிணி திட்டங்கள் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைவாகப் பயன்படுத்தியதன் காரணங்கள் கேட்டு திமுக வட சென்னை திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படியானால், 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் சிநிஜிவிஷிணி மற்றும் பிற முக்கிய விஷிவிணி திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் உண்மையில் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன? ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் சரியான நேரத்திலும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும், நுண் மற்றும் சிறு தொழில்முனைவோர் மத்தியில் இந்தத் திட்டத்தின் கடன் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கான விழிப்புணர்வு, மக்களைச் சென்றடைதல் மற்றும் எளிதாக்குவதை மேம்படுத்துவதற்கும் அமைச்சகம் எடுத்து வரும் திருத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

நெடுஞ்சாலையோரங்களில் மரம் நடும் திட்டங்கள் செயல்திட்டமும் நடவடிக்கையும் என்ன? ஆரணி திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி

தோட்டக்கலை, மரங்களை இடமாற்றம் செய்தல், அழகுபடுத்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவைகளை உள்ளடக்கிய பசுமை நெடுஞ்சாலைகள் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என ஆரணி திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் மற்றும் நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை விவரங்கள் என்ன?

கார்பன் பிரித்தெடுத்தல், காற்றின் தர மேம்பாடு மற்றும்

பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இதுவரை அடையப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகள் என்ன? நெடுஞ்சாலைகளில் பசுமைப் போர்வையை செயல்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

பசுமை நெடுஞ்சாலைகள் முயற்சியில் நிலைத்தன்மை மற்றும் சமூக பங்கேற்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

உணவு பதப்படுத்தும் தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு பொள்ளாச்சி தொகுதி திமுக எம்.பி. ஈஸ்வரசாமி

உணவு பதப்படுத்தும் தொழில் (திறிமி) மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன?

தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் விவரங்கள்?நடப்பு ஆண்டில் உணவு பதப்படுத்தும் துறைக்கு அரசு வழங்கிய நிதி எவ்வளவு? பல்வேறு திட்டங்களுக்கு அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மானியங்களின் விவரங்கள் என்ன?

வீடுதோறும் குடிநீர் இணைப்பு தண்ணீர் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை என்ன? தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

கிராமப்புறங்களில் வீடுகளுக்கு பிரத்யேக குடுநீர் இணைப்பு வழங்கும் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் (யியிவி) இன் கீழ் ஒற்றை கிராமத் திட்டங்கள் (ஷிக்ஷிஷி) மற்றும் பல கிராமத் திட்டங்களின் (விக்ஷிஷி) கீழ் வரும் பேரூராட்சிகள் அந்தந்த கிராம பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படுகிறதா என தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒற்றை கிராமத் திட்டங்கள் (ஷிக்ஷிஷி) மற்றும் பல கிராமத் திட்டங்களின் (விக்ஷிஷி) கீழ் வரும் பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் ஒரு கிராம பஞ்சாயத்துக்கு ஒரு வேட்பாளர் பயிற்சி பெறுகிறார் என்பது உண்மையா?

குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நீர் தர பரிசோதனையை ஊக்குவிக்க குடிநீர் தர பரிசோதனை ஆய்வகங்களை அமைக்குமாறு மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதா? மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அதில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, குடிநீரின் தரத்தை சோதிக்க அடையாளம் கண்டு பயிற்சி அளிக்குமாறு அரசு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதா?

அப்படியானால், அதன் விவரங்களும், மேற்கூறிய நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களும் என்ன? என்று அவர் கேட்டுள்ளார்.

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு புதிய மானியத் திட்டங்கள் பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு கோரிக்கை

சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய அலகுகள் உட்பட பல்வேறு அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில்களை (திறிமி) ஆதரிக்க அரசாங்கம் புதிய மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து திமுக மக்களவை உறுப்பினர் அருண் நேரு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு.

குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தத் திட்டங்களின் மொத்த ஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் என்ன?

பழங்கள், காய்கறிகள் மற்றும் அழுகக்கூடிய பொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், அவற்றின் ஆயுளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகள் என்ன?

உலக உணவு இந்தியா போன்ற நிகழ்வுகள் மூலம் முதலீடு மற்றும் உலகளாவிய கவனத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்முயற்சிகளை எடுத்திருந்தால் அதன் விவரங்கள் என்ன?

இந்தத் திட்டங்கள் மதிப்பு கூட்டலை மேம்படுத்துதல், உணவு வீணாவதைக் குறைத்தல் மற்றும் இந்தியாவை ஒரு முன்னணி உணவு பதப்படுத்தும் இடமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தபடும் நடவடிக்கைகள் என்ன?

குழாய் மூலம் வீட்டு எரிவாயு விநியோகம் தம்ழிநாடு முழுவதும் செயல்படுத்துவது எப்போது? திருவண்ணாமலை திமுக எம்.பி. சி என் அண்ணாதுரை; காஞ்சிபுரம் திமுக எம்.பி. க. செல்வம் கேள்வி

ஒன்றிய அரசு நகர எரிவாயு விநியோக (சிநிஞி) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் குழாய் இயற்கை எரிவாயு (றிழிநி) வலையமைப்பை அமைக்க இருப்பது குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் சி என் அண்ணாதுரை மற்றும் க. செல்வம் கேள்வி எழுப்பினார்கள்.

றிழிநி சேவை தற்போது செயல்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் நகரங்களின் பெயர்கள் என்ன? தமிழ்நாட்டின் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகராட்சிப் பகுதிகளில் றிழிநி செயல்படுத்தலை விரைவுபடுத்த ஏதேனும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? தமிழ்நாட்டில் றிழிநி நெட்வொர்க் மேம்பாட்டின் போது சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதையும் பாதுகாப்பு இணக்கத்தையும் உறுதி செய்வதற்கு அரசாங்கம் ஏதேனும் கண்காணிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதா? என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

புற்றுநோய் நோயாளிகளுக்கு அரசு உயர்தர சிகிச்சை வழங்கும் திட்டத்தின் நிலை என்ன? திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் கேள்வி

நாட்டில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சீரான உயர்தர சிகிச்சை மற்றும் மருத்துவப் பராமரிப்பை வழங்க தேசிய புற்றுநோய் கட்டமைப்பு (ழிசிநி) திறம்பட செயல்படுவதற்கு அதிக நிதி வழங்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து திமுக மாநிலங்கலவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ழிசிநிஇன் கீழ் புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்ன? நாட்டில் புற்றுநோய் நோயாளிகள் குறித்த தரவுகளைச் சேகரித்து தொகுக்க ழிசிநி எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்