Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டு வாக்காளர்களாக்கி தமிழ்நாட்டை பீகாராக மாற்ற நினைக்கும் பி.ஜே.பி: கருணாஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டே இருந்தோம்! எந்த அரசும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது வெளிமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக மாறப் போகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் பலர் அலறுகிறார்கள். இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!! சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்த செயல் திட்டத்தில் பீகரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்களர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.

பெரும் அதிர்ச்சி இது! 70 இலட்சம் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்களர்கள் அதாவது 10% வெளிமாநிலத்திவர் என்றால் நாளை தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொலைநோக்குத் திட்டத்தை நீண்டகாலமாக செய்துவருகிறது பா.ஜ.க. எப்படியாவது தமிழ்நாட்டை பீகாராக, மத்திய பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற திட்டத்தில் இந்திக்காரர்களை மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு குடியேற பா.ஜ.க. அரசு அனுமதித்தது. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. வந்தாரை வாழ வைப்போம் என்ற பெரிய மனதோடு தமிழ்நாட்டு வேலைகளுக்கு வெளிமாநிலத்தவரை அனுமதித்தார்கள் இப்போது தமிழ்நாட்டில் அவர்களும் வாக்களர்களாக மாறப் போகிறார்கள்.

வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது. வாக்களர்களாக மாற்றக் கூடாது. 90% வேலை தமிழ்நாட்டு தமிழர்களுக்கே என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். இப்போது எல்லாம் தலை கீழாக மாறிவிடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது பல மடங்காக மாறிவிட்டது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழ்நாட்டில் தற்போது உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 70 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் உரிமை பெறுவர்கள். அவ்வாறு நடந்தால் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பா.ஜ.க.விடம் கையளிக்கப்படும்.

ஏனென்றால் பீகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் அனைவரும். பா.ஜ.க.விற்குதான் அரசியல் வழியாக பங்குகளிப்பு செய்வார்கள். அப்படி செய்தால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை என்ன வாகும். தமிழ்நாட்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமே அது உடனடியாக நடந்தேறும். ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, வெளிமாநிலத்தவரை வெளியேற்றும் செயலில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று தமிழ்நாட்டில், நகரம் தொடங்கி கிராமம் வரை இந்திக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பா.ஜ.க. சனாதன கும்பல் அவர்கள் வழியாகத்தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தியை தமிழர்களிடையே திணிக்கிறது.

மண்ணின் மக்களின் அனைத்து வேலை வாய்ப்புகளும் இந்திக்காரர்கள் வசம் சென்றடைந்து விட்டது. இப்போது கிராமப்புற வங்கிகளில் மேலாளர்கள், எழுத்தர்களாக வட இந்தியர்களைப் பணியமர்த்துகிறார்கள். அவர்கள் தமிழும் பேசுவதில்லை, ஆங்கிலமும் பேசுவதில்லை. பா.ஜ.க. அரசு தமிழர் இன ஒதுக்கல் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து இந்திக்காரர்களை திட்டமிட்டே பணியமர்த்துகிறது. ஆகவே நாம் விழித்துக் கொள்ளவேண்டும். கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை உருவாக்க வேண்டும். வெளிமாநிலத்தவர்களை வேலைக்கு அழைத்து வந்தாலும், வேலை கொடுக்கும் ஒப்பந்தபடி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இன்னர் லைன் பர்மீட் என்ற சட்டம் உள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டிலும் உள் அனுமதிச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப் படுத்தினால் வெளியாரின் மிகை எண்ணிக்கையிலிருந்தும், எதிர்கால அரசியலிலிருந்தும் நாம் தப்பிக்க முடியும் இல்லையேல் தமிழ்நாடு பீகார். உத்திரபிரதேசமாக மாறும். நாம் இரண்டாம் தர குடிமக்களாக மாறுவோம்! ஆகவே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சேர்க்கப்படவுள்ள 70 இலட்சம் வெளிமாநிலத்தவரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது! உடனடியாக தமிழக அரசு தடுத்த நிறுத்தவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்! என கருணாஸ் கூறியுள்ளார்.