Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை உட்பட காஞ்சிபுரம், திருவள் ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

சென்னை: 2025-2026 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென தமிழக அரசு ரூ.38.00 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்து அதன்படி சென்னை பெருநகர எல்லைக்குள். 15 மண்டலங்களில் 78 பணிகளும், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள் ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 117 பணிகளும் தொடங்கி நீர்வளத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

இதில் பக்கிங்காம் கால்வாயில் 19 பணிகளும், கூவம் ஆற்றில் 19 பணிகளும், அடையாற்றில் 5 பணிகளும், இதர 35 பணிகள் வரவு கால்வாய்கள், ஏரிகள், உபரி நீர் கால்வாய், மடுவு பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள். திடக்கழிவுகள். மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணிகள் 234 மிதக்கும் மண் கழிவு அகற்றும் இயந்திரங்களுடன் குப்பைகளை அகற்ற லாரிகளுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுதவிர முட்டுக்காடு, புதுப்பட்டினம், கூவம், அடையாறு, எண்ணூர் மற்றும் பழவேற்காடு (Pulicat) முகத்துவாரங்களில் சேர்ந்துள்ள மணல் படிவுகள் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் முடியும் வண்ணம் தீவிரப்படுத்தும் நோக்கில் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் முதன்மை தலைமைப் பொறியாளர் (ம) தலைமைப் பொறியாளர் (பொது), நீ.வ.து., பொறி.சு.கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பொறி.சி.பொதுப்பணித்திலகம், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் பொறி.ம.மகேஸ்நாகராஜன், ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுடன் தள ஆய்வு இன்று மேற்கொண்டுள்ளார்.

மேலும், அனைத்து நீர்த்தேக்கங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்புக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கான கட்டிடங்களையும், கட்டுப்பாட்டு மையத்திற்கான மின் கணினி செயற்கைக்கோள் தகவல் கருவிகள் மற்றும் உபகரணங்களையும் ஆய்வு செய்தார்.