சென்னை: நியோமேக்ஸ் நிறுவனம் மதுரையில் இருக்க கூடிய எஸ்.எஸ். காலணி பகுதியில் தனது தலைமை அலுவலகத்தை வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தது. ரியல் எஸ்டேட் துறையில் பணத்தை முதலீடு செய்து அதிக வட்டி தருவதாக கூறி முதலீடுகளை பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உட்பட பல பொது மக்கள் இதில் முதலீடு செய்தனர்.
2010-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 2022ற்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு முறையாக பணத்தை தராததால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுவந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இருக்க கூடிய இந்த நிதி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும் என நிறுவத்தில் முதலீடு செய்த பொதுமக்கள் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்களை தொடர்ந்தனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பாக விசாரணை செய்யப்பட்டு தற்போது நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.