Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

டெல்லி : நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை இரண்டு மாதங்களில் வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 17 வயது நீட் பயிற்சி மாணவி 2023 ஆம் ஆண்டு சந்தேகத்துக்கு இடமான முறையில் விடுதியில் உயிரிழந்தார். இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அவரது மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவி மரண வழக்கை சி பி ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அத்தோடு நீட் உயிரிழப்புகளை தடுக்க நாடு முழுவதும் விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கி தீர்ப்பளித்தது. அதன்படி நீட்பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு முன்னதாக இரண்டு மாதங்களில் அதற்கான விதிமுறைகளை வகுத்து அமல்படுத்த வேண்டும்.

பயிற்சி மையங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட விபரங்கள் குறித்து 3 மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பாக உரிய மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் உட்பட 15 பரிந்துரைகளை வழங்கி உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.