டெல்லி: 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'பார்க்கிங்' படத்திற்கு சிறந்த திரைக்கதை பிரிவில் தேசிய விருது வெல்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். மேலும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ’பார்கிங்’ படத்திற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Non Future Films பிரிவில் சிறந்த ஒளிப்பதிவிற்காக, 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த தெலுங்கு திரைப்படமாக, பாலையா நடித்த பகவந்த் கேசரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருது பிரிவில் வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த மலையாள படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகை ஊர்வசி, பார்வதி நடித்த "உள்ளொழுக்கு" மலையாளப் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.