Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் உயர்மட்டக் குழு அறிக்கை தாக்கல்..!!

சென்னை: மதுரையில் 83 கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர்.துரைமுருகனிடம் நீதியரசர் ஜோதிமணி தலைமையிலான உயர்மட்டக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கிரானைட் குவாரி விதிமீறல் குறித்து ஆராய கடந்த ஆண்டு பிப்ரவரியில் நீதியரசர் ஜோதிமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில், மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற வீதிமீறல்கள் குறித்து ஆராய்ந்த குழுக்கள் தனது அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.

அந்த அறிக்கைகளை ஆராய்ந்து அரசுக்கு தக்க பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர். ப.ஜோதிமணி தலைமையில், பாஸ்கரன், கூடுதல் பொது இயக்குநர் (ஓய்வு) இந்திய புவியியல் ஆய்வு கழகம் மற்றும் சு.சுதர்சனம், கூடுதல் இயக்குநர் (ஓய்வு), புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகியோர்களை நிபுணர் உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்ட சிறப்புக் குழு கடந்த 20.02.2023 அன்று அமைக்கப்பட்டது.

நீதியரசர் தலைமையிலான இக்குழு மதுரை மாவட்டத்தில் 83 கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற வீதிமீறல்கள் தொடர்பான தனது அறிக்கையினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இன்று (10.07.2024) தலைமைச் செயலகத்தில் அளித்தது. அப்போது இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் எ.சரவணவேல்ராஜ், இ.ஆ.ப., ஆகியோர் உடன் இருந்தனர்.