2024 மக்களவை தேர்தலில் இருந்தே எனக்கு ஏதோ தவறு நடப்பதாக சந்தேகம் இருந்தது: ராகுல் காந்தி குற்றசாட்டு
டெல்லி: 2024 மக்களவை தேர்தலில் இருந்தே எனக்கு ஏதோ தவறு நடப்பதாக சந்தேகம் இருந்தது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார். டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது;
1.5 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்
1.5 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தேர்தலில் 15 இடங்கள் குறைவாக பெற்றிருந்தால் மோடி பிரதமராகி இருக்க முடியாது. தேர்தல் ஆணையம் மரித்துப் போய்விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.குஜராத் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் எனக்கு
சந்தேகம் இருந்து வந்தது. ராஜஸ்தான், ம.பி., குஜராத்தில் காங்கிரசால் ஒரு சீட் கூட வெல்ல முடியாதது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. மராட்டியத்தில் மக்களவை தேர்தலில் வென்ற காங்கிரஸ், அடுத்த 4 மாதத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்றது. மராட்டியத்தில் 3 வலிமையான கட்சிகள் திடீரென்று காணாமல் போய்விட்டன.
தேர்தல் ஆணையம் ஓட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளது
மராட்டிய தேர்தல் தோல்விக்கு பிறகு தேர்தல் முறைகேடு குறித்து உன்னிப்பாக கவனிக்க தொடங்கினோம். தேர்தல் ஆணையம் ஓட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு வைத்தார். ஓட்டு திருட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.
தேர்தல் முறைகேடு ஆதாரம் சில நாட்களில் வெளியீடு
தேர்தலில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் சில நாட்களில் வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம் மறித்துவிட்டது -ராகுல்
நாட்டில் தேர்தல் நடைமுறை ஏற்கெனவே மறித்துவிட்டது. மராட்டியத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்குமான இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் குறுகிய காலத்தில் சேர்க்கப்பட்ட 1 கோடி வாக்காளர்களின் ஓட்டு பாஜகவுக்கு சென்றுள்ளது என கட்டமாக தெரிவித்தார்.