Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படும் நிலையில் தீவிர கண்காணிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படும் நிலையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 18 வனக்காவலர்கள் அடங்கிய குழு 3 பிரிவுகளாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்த ரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கான சிறுத்தை கண்காணிப்பு குழுக்களாக, அவசரக் குழு, நிரப்புக் குழு மற்றும் 2 குழுக்கள் என மூன்று வனச்சரகர்கள் தலைமை யில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் 21 பேர்களைக் கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் சிறுத்தையை கண்காணிக்க வேண்டிய பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல் குழுவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன் தலைமையில், ஆனந்தன்கலைராஜ், சரஸ்வதி, விடு தலைச்செல்வி,அருணாஸ்ரீ,நித்திய ஜீவா ஆகியோரும்2ஆவது குழுவில் வேப்பந் தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர் தலைமையில் பிரதீப்குமார், அன்பரசு, மணிகண்டன், வெங்கடேசன், கணேசன், சண்முகம் ஆகியோரும், அவசர குழுவில் சமூக காடுகள் வனச்சரக அலுவலர் முருகானந்தம் தலைமையில், சக்திவேல், அஜித்குமார், சிங்காரவே லன்,அறிவுசெல்வன், ராஜா ஆகியோரும், நிரப்புக் குழு வில் கலியன், ஆனந்தபாபு, ரோஜா, அபிபிரியா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட குழுக்களில் முதல்குழு காலை 6 மணி முதல் பகல் 12மணி வரையும், 2ஆவதுகுழு பகல் 12மணிமுதல் மாலை 6 மணி வரையும், அவசரக் குழு மாலை 6மணிமுதல் காலை 6மணி வரையும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், நிரப்புக் குழுவில் உள்ளவர்கள் முதல் 3குழுக்களில் யாரே னும் வர இயலாத சூழலில் அவருக்கு பதில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள் ளது. இதில் குறிப்பாக முதல் குழுவினர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ் சாலையில் தொழுதூர் வெள்ளாற்று பாலம்முதல் அகரம் சிகூர் வெள்ளற்று பாலம் வரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும், 2 ஆவது குழுவினர் அகரம் சிகூர் பகுதியில் இருந்து மருதையான் கோவில் வரை மாவட்ட எல்லை யோர நீர்நிலைப் பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3ஆவதாக நியமிக் கப்பட்டுள்ள கொடைக்கா னல், ஏற்காடு, பொள்ளாச்சி நீலகிரி, தருமபுரி, சத்திய மங்காலம் வனபகுதிகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற அவசரகுழுவினர் சித்தளி,பேரையூர்,குன்னம் பகுதிகளில்உள்ள காப்புக் காடுகளில் காணப்படும் நீர் நிலைகளில் சிறுத்தையின் கால் தடங்கள் உள்ளனவா சிறுத்தையின் கழிவு எச்ச ங்கள் உள்ளனவா என்பது குறித்து கண்காணிக்க உள்ளனர். இந்த 3 குழுவிலும் யாராவது விடுப்பெடுத்தால் அந்த இடத்தை நான்காவது குழுவினர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார். அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட எல்லையிலுள்ள நீர்வழித்தடங்களில் வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.