Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லெஜன்ட் கிரிக்கெட் தொடரின் அரைஇறுதிப்போட்டி: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்..?

லெஜன்ட் கிரிக்கெட் தொடரின் அரைஇறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானுடன் விளையாட மறுத்து லீக் போட்டியை இந்திய சீனியர் வீரர்கள் புறக்கணித்த நிலையில் மீண்டும் பாகிஸ்தானுடன் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறன.நேற்று(29-07-2025) யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய சாம்பியன்ஸ் அணி, மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்களை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.1 ஓவர்களில் இந்த இலக்கை எட்டினால் அரையிறுதி வாய்ப்பை பெறும் என்று இருந்த நிலையில் இந்திய அணி 13.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.

இதனை அடுத்து இந்த அணி 3 புள்ளிகளுடன் 4-ம் இடத்திற்கு முன்னேறியது. அதனால் இந்திய அணி அரைஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நாளை(31-07-2025) நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா அழித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர், பாகிஸ்தான் மீண்டும் தாக்க முயன்றது, அதை இந்தியா முறியடித்தது. இந்த மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நாட்டோடு எந்த வகையான உறவையும் வைத்துக் கொள்ள இந்திய அணி மறுத்துவிட்டது. லீக் சுற்றின் போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணித்து விளையாட மறுத்ததால், இந்தப் போட்டி நடக்குமா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இரண்டாவது அரையிறுதியில், ஏபி டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி ஜூலை 31 ஆம் தேதி பிரட் லீ தலைமையிலான ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியை எதிர்கொள்ளும். புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளன.