Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுப்பு!

ஈரான்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 8 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். ஈரான் அதிபர் இப்ராஹின் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்பா பகுதியில் மலையில் மோதி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது இச்சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரும் பயணித்துள்ளார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் உறுதி செய்தது. டிரோன் உறுதி செய்த இடத்தை நோக்கி மீட்புக்குழு விரைந்தனர். இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, விபத்தில் சிக்கியவர்கள் உடல்கள் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மலைப்பாதைகள் செங்குத்தாக இருப்பதால் உடல்களை கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் யார் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டது.

விபத்து நடந்த அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்பு. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் 18 மணி நேரத்திற்குப் பிறகு கண்டெடுப்பு. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரில் நேற்று விபத்துக்குள்ளானது. முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.