Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்: அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்

சென்னை: தமிழ்நாடு பா.ஜ.க.வில் அண்ணாமலை மற்றும் தமிழிசை தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜ போட்டியிட்ட 19 மக்களவை தொகுதிக்குட்பட்ட 114 சட்டசபை தொகுதிகளிலும் முதலிடம் பிடிக்க முடியவில்லை. பாஜவின் 4 எம்எல்ஏக்கள் தொகுதியிலும் மக்கள் மண்ணைத்தான் கவ்வச் செய்துள்ளனர். சொந்த தொகுதியிலேயே பாஜவினர் கடும் பின்னடைவை சந்தித்தது, பாஜவினர் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பையை காட்டுகிறது. இது பாஜவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பா.ஜ.க.வில் அண்ணாமலை மற்றும் தமிழிசை தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு அண்ணாமலையின் செயல்பாடுகளே காரணம் என்று நிர்வாகிகள் புகார் கூறி வந்தனர். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தமிழிசை கூறிய நிலையில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது

கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணாமலை பா.ஜ.க.வில் பதவி அளித்ததையும் தமிழிசை விமர்சித்திருந்தார். அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் மற்ற நிர்வாகிகளுடன் அவர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவரம் கேட்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் பலர் தான் சொல்வதை கேட்கவில்லை என்று அண்ணாமலை மேலிடத்தில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் முழு கட்டுப்பாட்டை தனக்கு அளித்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறலாம் என மேலிடத்தில் அண்ணாமலை கூறியதாகவும் கூறப்படுகிறது.