Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா: லண்டனில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்

டெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து புறப்பட்டார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் வலுவான பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பல பொருட்களையும் திருடி சூறையாடினர். அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் கோரி இருந்த நிலையில் அந்நாட்டின் அனுமதிக்காக காத்திருந்தார். இந்நிலையில் ஷேக் ஹசீனாவை இந்தியாவுக்கு நேற்று அழைத்து வந்த வங்கதேச விமானம் இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட்டது. டெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து வங்கதேச விமானம் புறப்பட்டுச் சென்றது. ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு வங்கதேச விமானம் புறப்பட்டது.

வங்கதேச விமானப்படையின் C-1301J விமானம் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா லண்டனில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச விமானம் அடுத்த இலக்கை நோக்கி புறப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. வங்கதேச விமானத்தை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது.